மலேசியாவின் குச்சின் நகரில் நடைபெற்ற நெடுந்தூர ஓட்டப் போட்டியில் 2500 ஓட்ட வீரர்களுக்கு மத்தியில் 06 வது இடத்தை MAS Intimates Silueta நிறுவனத்தின் குழுத் தலைவர் தனுஷ்க பிரதீப் பெற்றுக் கொண்டார். நாட்டுக்கு பெருமை தேடித் தந்த தனுஷ்க அவர்களுக்கு MAS நிறுவனத்தின் வாழ்த்துக்கள்!
Author: Diyani Editors
மூலோபாயத்துடனும் சூழல் நேயத்துடன் சுய வலுச்சக்தித் தேவையில் குறிப்பிடத்தக்க சதவீதத்தை சூரிய சக்தியைக் கொண்டு உற்பத்தி செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள IMV சூரிய பனல் தொகுதியை மேலும் விருத்தி செய்து 6MV புதிய பனல் தொகுதியொன்றை பொருத்தும் நிகழ்வு MAS Fabric Park வளாகத்தில் நடைபெற்றது.
எம்பிலிப்பிட்டிய சந்திரிக்காக வெவ பிரதேசத்தை மையப்படுத்தி எம்பிலிப்பிட்டிய நகர சபைக்குட்பட்ட பிரதேசத்தை பசுமை வலையமொன்றாக மாற்றும் அடிப்படை இலக்குடன் எம்பிலிப்பிட்டிய பொலிஸ் எம்பிலிப்பிட்டிய நகர சபை எம்பிலிப்பிட்டிய பிரதேச சபை மகாவெலி அதிகார சபை தெரண ஊடகம் என்பவற்றுடன் ஒன்றிணைந்து MAS Active Asialine நிறுவனத்தல் 5000 மரக்கன்றுகளை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது.
சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் முகமாக பெண்களும் பால்நிலை சமத்துவமும் எனும் தலைப்பில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சித் திட்டங்கள் MAS Active Mamadala நிறுவன வளாகத்தில் இடம்பெற்றது. 33 முதல் 43 வயது வரையான அங்கத்தவர்களுக்கான பிணியாய்வு நிலையம் கர்ப்பிணித் தாய்மாரை விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித் திட்டம் சிறுவர் மற்றும் மகளிர் பணியக ஊழியர்களின் பங்களிப்புடன் மகளிர் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம் ஓவிய மற்றும் கைப்பணி கண்காட்சி எனும் நிகழ்ச்சித் திட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டன. இங்கு சூழல் நேய மூலப் பொருட்களை மாத்திரம் பயன்படுத்தி அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கவொன்றாகும்.
https://www.youtube.com/watch?v=5v0rdaqGGIo
யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் கிளிநொச்சி இராணுவப்பிரிவினரின் ஆதரவுடன் 271 நபர்கள் இரத்த தானம் செய்தனர்.
நாம் பயன்படுத்துவது பொது மற்றும் தனியார் சேவை வாகனங்களாக இருப்பினும் எமது பாதுகாப்பை உறுதி செய்வது முக்கியமானது. அதன்படி மாணவர்களது துவிச்சக்கர வண்டிகளில் பிரதிபலிப்பு சமிக்ஞைகளானது எமது நிறுவனத்தினால் ஒட்டப்பட்டது.
நீரை சேமிப்போம் என்ற தலைப்பில் பாரதிபுரம் பாடசாலையில் கலைப் போட்டி நடத்தப்பட்டு, வயது அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் தலா 3 மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.