MAS ஹோல்டிங்க்ஸின் ஆடைத் துறை மற்றும் அதிநவீன கண்டுபிடிப்புகளுக்கான பங்களிப்பை உறுதிப்படுத்துகிறது ஆடைகள் மற்றும் ஜவுளி உற்பத்தியில் உலகளாவிய முன்னணி நிறுவனமான MAS Holdings, தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக மதிப்புமிக்க Clarivate South Asia Innovation விருதை பெற்றுள்ளது. புத்தாக்கங்களில் தொடர்ந்து சிறந்து விளங்கும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் புகழ்பெற்ற உலக அறிவாற்றல் நிறுவனமான Clarivate, இந்தியாவின் மும்பையில் நடைபெற்ற மதிப்பிற்குரிய Innovation Forumஇல் இந்த விருது வழங்கப்பட்டது. South Asia Innovation Awardsக்கான தேர்வு செயல்முறை Clarivateஇன் சிறந்த 100 Global Innovators™ என்ற வழிமுறையுடன் நெருக்கமாக இணைகிறது, இது உலகளாவிய கண்டுபிடிப்புத் தலைவர்களை அடையாளம் காண்பதற்கான அளவுகோலாகும். Derwent World Patents Index™ (DWPI™) மற்றும் Derwent Patents Citation Index™ ஆகியவற்றின் தரவுகளின் அடிப்படையில், காப்புரிமை அளவு மற்றும் ஒவ்வொரு காப்புரிமை பெற்ற யோசனையின் (Ideas) புத்தாக்கத் திறனின் வலிமையையும் Clarivate மதிப்பீடு செய்கிறது. MAS Holdingsஇன் பிரதம…
Author: Diyani Editors
கழிவு முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக ஆரம்ப கட்டமாக திருமுறிகண்டி இந்து வித்தியாலய மாணவர்களுடன் தேசிய சுற்றாடல் அதிகார சபையின் வழிகாட்டுதல் மூலம் கருத்தரங்கு எமது நிறுவனம் சார்பாக நடாத்தப்பட்ட்துடன் ,PET பாட்டில் சேகரிப்பு BIN திருமுருகண்டி ஆலய வளாகத்தில் நிறுவியதுடன் அம்மாணவர்களுடன் ஒன்றிணைந்து அப்பகுதியில் சிரமதான பணி செய்யப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை இரத்தவங்கி வேண்டுகோளிற்கிணங்க எமது நிறுவன சமூக பொறுப்பு என்ற வகையில் ஏறத்தாழ 70 ஊழியர்கள் இரத்த தானம் செய்தனர்.
Trischel நிறுவனத்தின் தலையீட்டுடன் lululemon (CANADA) நிறுவனத்தின் நிதியளிப்புடன் கஸ்னாவ பிணியாய்வு நிலையத்திற்கான புதிய கட்டடமொன்றும் சிறுவர் பூங்காவும் நன்கொடையாக வழங்கப்பட்டது.
வரக்காபொல சுகாதார வைத்திய பணிமனையின் வேண்டுகோளுக்கிணங்க Trischel நிறுவனத்தின் தலையீட்டுடன் lululemon (CANADA) நிறுவனத்தின் நிதியளிப்புடன் வரக்காபொல MOH பணிமனைக்குட்பட்ட போப்பிட்டிய பிணியாய்வு நிலையத்திற்கான புதிய கட்டடமொன்று நன்கொடையாக வழங்கப்பட்டது.
வெசக் காலத்துடன் இணைந்து இரத்த தான முகாம் Noyon அங்கத்தவர்களால் நிறுவன வளாகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டது.
MAS Intimates Thurulie நிறுவனத்தினூடாக அரணாயக்க அசு பினி ஓடையை சுத்தம் செய்யும் தன்னார்வ நிகழ்ச்சித் திட்டமொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அரணாயக்க பிரதேச சபையும் இந்நிகழ்ச்சித்திட்டத்தில் ஒன்றிணைந்தனர். பொலித்தீன் மற்றும் பிளாத்திக்கு அற்ற சூழலொன்றை நிர்மாணிக்கும் நோக்குடன் இந்நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
Express pearl கப்பலில் ஏற்பட்ட தீயினால் மாசடைந்த நீர்கொழும்பு கடற்கரையை தொடர்ந்தும் பாதுகாப்பதற்காக அதனை சுத்திகரிப்புச் செய்யும் வேலைத்திட்டத்தில் MAS KREEDA Synergy நிறுவனத்தின் அங்கத்தவர்கள் பங்கு பற்றினர்.
உலக நீர் தினத்தை நினைவுகூறும் முகமாக MAS KREEDA Shadeline நிறுவனத்தால் விஷேட வைபவங்கள் அண்மையில் மஹியங்கன ப/ஒருபெதிவெவ தேசிய பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது. இதன்போது ‘நீரிம் மகத்துவத்தை உணர்வோம்’ எனும் தலைப்பில் நடைபெற்ற சுவரொட்டி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் பாடசாலை தோட்டத்தில் பழமரக் கன்றுகளை நடும் நிகழ்ச்சித் திட்டமும் பாடசாலை வளாகத்தில் தற்போது அமைக்கப்பட்டுள்ள மழை நீர் சேகரிப்புத் தொகுதியை விஸ்தரிப்பதற்கான உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
MAS KREEDA Shadeline நிறுவனத்தில் பணி புரியும் பாலூட்டும் தாய்மார்களின் தேவைகளை கருத்திற் கொண்டு சகல வசதிகளுடனும் கூடிய தனியான இடமொன்றை பூர்த்தி செய்து அவர்களிடம் வழங்கப்பட்டது.