UNFPA இலங்கை பிரிவின் உதவியுடன், ஆடைத் துறையில் பெண்களுக்காக கட்டப்பட்ட முதல் நல்வாழ்வு மையம், சமீபத்தில் கிளிநொச்சியில் UNFPA இலங்கை பிரிவு புதிய செயல் அதிகாரி திரு. ஃபுன்ட்ஷோ வங்கியேல் (Phuntsho Wangyel) அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. UNFPA இலங்கை பிரிவு, MAS குழுமம், ஜப்பான் அரசு மற்றும் இலங்கை செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றின் கூட்டுத் தலைமையில் நடைபெறும் இந்தத் திட்டம், நாட்டின் முக்கியத் தொழிலான ஆடைத் துறையை வலுப்படுத்தும் பணியாளர்களுக்கு கௌரவம், சுகாதாரம் மற்றும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆடைத் துறையில் பணிபுரியும் 350,000 க்கும் மேற்பட்ட பணியாளர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர். எனவே இந்த நல்வாழ்வு மையம் அவர்களின் மனநலம், இனப்பெருக்க ஆரோக்கியம், துன்புறுத்தல் மற்றும் வன்முறை போன்ற பிரச்சினைகளுக்கு உள்ளானோர் தொடர்பாக அதிக கவனம் செலுத்துகிறது. பணியாளர்களின் நலனுக்காக தனியார் துறை மேற்கொள்ளும் இத்தகைய முதலீடுகள், உண்மையில் ஒரு நியாயமான எதிர்காலத்திற்கான முதலீடாகும்.…
Author: Diyani Editors
MAS இன்டிமேட்ஸ் விடியல் நிறுவனம், எங்கள் அர்ப்பணிப்புள்ள தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் வெளிப்புற பங்குதாரர்களின் ஆதரவுடன் 80 பைண்ட் உயிர்காக்கும் இரத்தத்தை சேகரித்து, ஒரு வெற்றிகரமான இரத்த தான இயக்கத்தை பெருமையுடன் ஏற்பாடு செய்தது. அவர்களின் தாராள மனப்பான்மையும், நன்கொடை அளிக்கும் விருப்பமும் எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றவும், தேவைப்படும் நோயாளிகளுக்கு நம்பிக்கையை அளிக்கவும் உதவும். இந்த அர்த்தமுள்ள நோக்கத்திற்கு பங்களித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி – ஒன்றாக, நாங்கள் ஒரு உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துகிறோம்.
அமெரிக்காவால் விதிக்கப்படும் இந்த பரஸ்பர புதிய வர்த்தக வரிகள் யாவை? ஒரு நாட்டிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக பற்றாக்குறை ஒரு சதவீதமாகக் கணக்கிடப்பட்டு புதிய வர்த்தக வரிகள் விதிக்கப்படுகின்றன. ஏப்ரல் 2ஆம் திகதி 2025 அன்று வெளியிடப்பட்ட அமெரிக்க அரசாங்க அறிவிப்பின்படி, இந்த வரிகள் பல்வேறு நாடுகளின் வர்த்தக பற்றாக்குறையைக் குறைப்பதற்காக விதிக்கப்படுகின்றன. அதன்படி, ஒரு குறிப்பிட்ட நாடு அமெரிக்காவிற்கு பொருட்கள் ஏற்றுமதி செய்தால், அந்த பொருட்கள் கூடுதல் வரிக்கு உட்படுகின்றன. அதன் விளைவாக, அந்த பொருட்களை வாங்கும் அமெரிக்க நிறுவனங்கள் அந்த கூடுதல் தொகையை அமெரிக்க அரசுக்கு செலுத்த வேண்டியதாகிறது. இது உற்பத்திச்செலவுகளை அதிகரித்து, இறுதிப் பொருட்களின் விலையை உயர்த்தும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அமெரிக்கா தனது உற்பத்தி அலகுகள் அதிக போட்டித்தன்மையுடன் மாற ஊக்குவிப்பதற்காக இந்த வரிகளை விதித்துள்ளது, மற்ற நாடுகளில் உற்பத்திக்கு தடை விதிக்கவில்லை. இந்த வரி விதிப்பின் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் மற்றும் ஆடைத் துறைக்கு ஏற்படும்…
மலர்ந்துள்ள புத்தாண்டில் உங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து ஊக்கமளிக்கும் MAS குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுரேன் பெர்னாண்டோவின் சிறப்பு வாழ்த்துச் செய்தி https://www.youtube.com/watch?v=vrr3hHB_CzE
2025 புத்தாண்டுக்கு MAS குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுரேன் பெர்னாண்டோ MAS உறுப்பினர்களுக்கு ஆற்றிய விஷேட உரை https://youtu.be/053KM6EOpAg
என் சக இலங்கை ஊழியர்களுக்கு, கடந்த சில நாட்களில், எங்கள் தேசத்தின் வரலாற்றில் மிகவும் அமைதியான தேர்தல்களை பார்த்தது மனதிற்கு மகிழ்ச்சியளிக்கிறது. பெருந் தொற்று, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி என கடந்த சில கடுமையான ஆண்டுகளுக்குப் பின், அமைதியான மற்றும் ஜனநாயக பூர்வமான அதிகார மாற்றம் எங்கள் தேசத்தின் மற்றும் மக்களின் நிலைத்தன்மையை விளக்குகிறது. ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் எங்கள் நாடு புதியதொரு மாற்றத்தை ஏற்றுக் கொள்ளும் போது, எங்கள் தேசத்தின் மற்றும் எங்கள் தொழில்துறையின் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்நோக்குகிறோம். இலங்கையின் மிகப்பெரிய தனியார் துறையின் தொழில் வழங்குனராகவும், மிகப்பெரிய ஏற்றுமதியாளர்களாகவும் உள்ள நாம் எமது பொறுப்பை தெளிவாக அறிவோம். எப்போதும் நாங்கள் செய்ததைப் போலவே, எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கான பெறுமதியை உருவாக்குவதில் தொடர்ந்து கவனம் செலுத்துவது அவசியமானதொன்றாகும். இதன் மூலம் இலங்கையின் பொருளாதார நலனில் முன்னணி பங்கு வகிக்க முடிகின்றது. இத்தகையதொரு மாற்றம் நிழ்ந்துள்ள…
20 ஆண்டுகளாக, உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் அவர்களின் சமூகங்களை நாம் வலுவூட்டியுள்ளோம். நாங்கள் முன்னெடுத்த திட்டங்கள், பெண்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களுக்கு தீர்வைத் தேடுவதோடு, வேலைத்தளம், வீடு மற்றும் சமூகத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளை அகற்ற முயல்கிறது. பெற்றோர்கள் தங்கள் வேலையை சுதந்திரமாக செய்யக்கூடிய வகையில் குழந்தைகள் மற்றும் சிறு பிள்ளைகளுக்கு நிறுவனத்தின் உள்ளே மற்றும் வெளியே பாதுகாப்பு வசதிகளை வழங்குகின்றமை நாம் முன்னெடுத்து வரும் மற்றுமொரு செயற்திட்டமாகும். அந்த வகையில் “பெண்களை முன்னிலைப்படுத்தும்”, பாலின சமத்துவத்தை நோக்கிய இந்தப் பயணத்தில், இன்னுமொரு தூதுவராக இருக்கும் கயலின் கதையே இது.
தற்போதைய காலகட்டத்தில் அந்நிய செலாவணியை அதிகளவில் பெற்றுத்தரக்கூடிய முதன்மை ஏற்றுமதி நோக்கை அடிப்படையாகக் கொண்ட தொழில்துறைகளுள் ஆடைக் கைத்தொழில் பிரதான பங்கு வகிப்பதுடன், ஏற்றுமதி மூலம் பாரிய வருமானத்தை பெற்றுத்தரும் கைத்தொழில் துறையாகவும் ஆடைக் கைத்தொழில் மாறியுள்ளது. அந்த வகையில் இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்தில் ஆடைக் கைத்தொழில் முதுகெலும்பாக இருந்து வருகின்றது. இலங்கையிலிருந்து தைத்த ஆடைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால், எமது நாட்டு ஆடைத் தயாரிப்புகளுக்கு உலகில் பாரிய வரவேற்பு உள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் 1977 இல் திறந்த பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், ஆடைக் கைத்தொழில் வளர்ச்சியில் இலங்கை பிரதான நாடாகியது. இலங்கையின் பெரும்பாலான மாவட்டங்களில் ஆடைத் தயாரிப்புகள் மேற்கொள்ளப்படுவதுடன், ஆடைக் கைத்தொழில் நிறுவனங்களும் உருவாகத் தொடங்கின. இலங்கையில் பெரும்பாலான ஆடைக் கைத்தொழில் நிறுவனங்கள், முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களில் அமைந்துள்ளன. எமது நாட்டு ஆடைக் கைத்தொழிலில் செல்வாக்கு செலுத்துகின்ற பிரதான காரணிகளாக தொழிலாளர் வசதி, வெளிநாட்டுச் சந்தைவாய்ப்பு, முதலீடு…
MAS Kreeda Methliya வில் பொங்கல் கொண்டாட்டங்களின் மகிமை. பொங்கல் பூஜையால் ஆசிர்வதிக்கப்பட்டோம். எமது ஆலை முழுவதும் மாவிலைத் தோரணங்கள் மற்றும் கோலங்களின் அழகுடன் பூரிப்பு நிறைந்திருக்க,புதிதாய் பொங்கிய பொங்கலைப் பகிர்ந்துண்டு மகிழ்ந்தோம். MAS Kreeda Methliya MAS Kreeda Balangoda MAS Kreeda Balangoda வில் ஜனவரி 17ஆம் திகதி பலங்கொட குழுவினருடன் தைப் பொங்கல் திருவிழாவைக் கொண்டாடினோம். மனம் மகிழ்ந்தோம். MAS KREEDA AL-SAFI- DULAYL MAS KREEDA AL-SAFI-DULAYLஇல் பொங்கல் கொண்டாட்டங்கள்.
மலரும் 2024ஆண்டிற்காக MAS குழும பிரதம நிறைவேற்று அதிகாரி MAS அங்கத்தவர்களுக்காக ஆற்றிய உரை https://www.youtube.com/watch?v=isia-vor3sc