என் சக இலங்கை ஊழியர்களுக்கு,
கடந்த சில நாட்களில், எங்கள் தேசத்தின் வரலாற்றில் மிகவும் அமைதியான தேர்தல்களை பார்த்தது மனதிற்கு மகிழ்ச்சியளிக்கிறது. பெருந் தொற்று, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி என கடந்த சில கடுமையான ஆண்டுகளுக்குப் பின், அமைதியான மற்றும் ஜனநாயக பூர்வமான அதிகார மாற்றம் எங்கள் தேசத்தின் மற்றும் மக்களின் நிலைத்தன்மையை விளக்குகிறது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் எங்கள் நாடு புதியதொரு மாற்றத்தை ஏற்றுக் கொள்ளும் போது, எங்கள் தேசத்தின் மற்றும் எங்கள் தொழில்துறையின் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்நோக்குகிறோம். இலங்கையின் மிகப்பெரிய தனியார் துறையின் தொழில் வழங்குனராகவும், மிகப்பெரிய ஏற்றுமதியாளர்களாகவும் உள்ள நாம் எமது பொறுப்பை தெளிவாக அறிவோம். எப்போதும் நாங்கள் செய்ததைப் போலவே, எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கான பெறுமதியை உருவாக்குவதில் தொடர்ந்து கவனம் செலுத்துவது அவசியமானதொன்றாகும். இதன் மூலம் இலங்கையின் பொருளாதார நலனில் முன்னணி பங்கு வகிக்க முடிகின்றது.
இத்தகையதொரு மாற்றம் நிழ்ந்துள்ள காலத்தில், எங்கள் நிறுவனத்தின் விழுமியங்களை நீங்கள் பிரதிபலிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன் மற்றும் எல்லா சந்தர்பங்களிலும் தாழ்மையாகவும் மரியாதையாகவும் நடந்து கொள்வதும் அவசியமென்பதை மனதில் கொள்ளுங்கள். புதிய அரசு உருவாகும் போது, அடுத்த சில மாதங்களில் பாராளுமன்ற பொதுத் தேர்தலுடன் புதிய அரசாங்கம் உருவாகும் நிலையில், துடிப்பான மற்றும் செழிப்பான தேசத்திற்கு பங்களிப்பதற்கான இந்த முக்கியமான வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக்கொள்வோம்.
உங்களுக்கும் மற்றும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துக்கள்.
மிகவும் அன்புடன்,
சுரேன்