பெண்கள் முன்னிலையில் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் ‘அபிமானி திரிலிய’ என்ற தொழில் முயற்சியாண்மை மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம், அபிமானியில் வெற்றி பெற்ற பெண்களை தொழில் முயற்சியாண்மை ஆற்றல்களுடன் வலுவூட்டுவது தான். இதன்மூலம், புதிய பெண் தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதுடன், வணிகத்தை விருத்தி செய்வதற்காக தொழிற்பயிற்சி வழங்குவதற்கும், புதிய வாழ்வாதார வழிகளை சிறப்பாக உருவாக்கிக் கொள்வதன் ஊடாக ஆற்றல் மிக்க பெண் தொழில் முயற்சியாளர்களை கட்டமைப்பதற்கும் MAS குழுமம் பங்களிப்பு நல்கியது. இந்த வேலைத்திட்டத்தின் மூலம் இனங்காணப்பட்ட ஊக்கமுள்ள பெண்ணான ஆஷா சந்தமாலியின் கதையே இது. இவர் Linea Aqua நிறுவனத்தைச் சேர்ந்தவர்.
கிராமிய பின்புலத்தை நேசிக்கும் வாழ்க்கை முறைக்குப் பழகிய நான், சிறுவயது தொடக்கம் வீட்டுத் தோட்டச் செய்கையில் ஆர்வம் காட்டியவள். எனினும், பின்னாட்களில் ஆடையுற்பத்தித் துறையில் வேலை செய்யத் தொடங்கியதை அடுத்து, ஓய்வென்பதே இருக்கவில்லை. வேலை முடிந்து வீடு வந்து சமயம் நேரம் இருக்கையில் ஏதேனும் பயிரிட வேண்டும் என்ற அபிலாஷை என்னிடம் இருந்தது. ஒரு நாள் புற்றுநோயாளி ஒருவரின் நலன் விசாரிக்க ஆஸ்பத்திரி சென்ற சமயம், நோயாளிகளின் நலனுக்கான பிரத்தியேக காளான் செய்கை மீது கவனம் குவிக்கக் கிடைத்தது.
பாரமற்ற மரத்தூளை பிரதான ஊடகமாகக் கொண்டு பாதுகாப்பான சூழலில் வளர்க்கப்பட்ட காளான் கொத்தின் மூலம் மேலதிக வருமானம் கிடைப்பதை அறியக் கிடைத்தது. அத்துடன், தற்போதைய சமூகத்திற்குத் தேவையான வகையில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய பதார்த்தங்கள் இல்லாத உணவொன்றை அறிமுகப்படுத்தவும் என்னால் முடிந்தது.
மரத்தூள், அரசித் தவிடு, கல்சியம் காபனேற், மெக்னீசியம் சல்பைற் ஆகிய பிரதான பதார்த்தங்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்
ட கொம்போஸ்ட் கலவையை பொலித்தீன் பைகளில் இடுவோம். அந்தப் பைகளை வாய் இறுகக் கட்டிய நீராவி பீப்பாய்க்குள் இட்டு குளிர விட்டு, அதன் பின்னர் காளான் விதைகளை சேர்த்து, பூஞ்சை வளர விடுவோம். ஒரு மாதத்திற்குப் பின்னர் பூஞ்சை வளர்ந்துள்ள பைகளின் மூடிக்கு அருகில் வெட்டி, காளான் செடிகளை வீட்டில் வைத்து தண்ணீர் தெளிப்போம். அப்போது காளான் வளரும். இந்தக் காளான்களை பொதி செய்து சந்தையில் விற்பனை செய்வதன் மூலம் மேலதிக வருமான மார்க்கத்தை உருவாக்கிக் கொள்ள என்னால் முடிந்தது.
மிகவும் குறுகிய காலத்தில் காளான் செய்கை மூலம் நல்லதொரு வருவாயைப் பெறும் ஆற்றல் கிடைத்தது. பாரம்பரிய முறைகளுக்கு அமைய முன்னெடுக்கப்படும் காளான் செய்கையில் புதிய தொழில்நுட்பத்தை சேர்க்கும் நோக்கம் எனக்கு உண்டு. கிராமப் புறங்களில் புதிய பயிர்ச்செய்கைப் பைகளை தயார் செய்வதற்கும், காளான் வளர்ப்பு வசதிகளை உருவாக்கவும், நீர் விசிறுவதற்கும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, உற்பத்தியை அதிகரித்துக் கொள்ள முடியும். இதன்மூலம் எனது உற்பத்தியின் வர்;த்தகப் பெயரை பிரபலம் பெறச் செய்வது எனது இன்னொரு எதிர்பார்ப்பாகும்.
‘ காளான் செய்கை மூலம் நல்லதொரு வருவாயைப் பெறும் ஆற்றல் கிடைத்தது’