Close Menu
    Facebook X (Twitter) Instagram
    வெள்ளி, வைகாசி 9
    Trending
    • அமெரிக்காவின் வர்த்தக வரிகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
    • MAS குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுரேன் பெர்னாண்டோவின் சிறப்பு வாழ்த்துச் செய்தி
    • 2025 புத்தாண்டுக்கு விஷேட உரை
    • தலைமை நிர்வாக அதிகாரிகள் இடுகை தேர்தல் செய்தி
    • பெண்களை முன்னிலைப்படுத்தும் – கயலின் கதை
    • பாரிய பங்களிப்பு வழங்கும் MAS Holdings ஆடைக் கைத்தொழில் நிறுவனம்
    • பொங்கல் பூஜையால் ஆசிர்வதிக்கப்பட்டோம்
    • 2024 விசேட செய்தி
    Diyani Online Magazine
    Facebook Instagram YouTube
    • Home
    • About us
    • Trending
    • Top News
    • Events
    Diyani Online Magazine
    Home»பாரிய பங்களிப்பு வழங்கும் MAS Holdings ஆடைக் கைத்தொழில் நிறுவனம்

    பாரிய பங்களிப்பு வழங்கும் MAS Holdings ஆடைக் கைத்தொழில் நிறுவனம்

    தற்போதைய காலகட்டத்தில் அந்நிய செலாவணியை அதிகளவில் பெற்றுத்தரக்கூடிய முதன்மை ஏற்றுமதி நோக்கை அடிப்படையாகக் கொண்ட தொழில்துறைகளுள் ஆடைக் கைத்தொழில் பிரதான பங்கு வகிப்பதுடன், ஏற்றுமதி மூலம் பாரிய வருமானத்தை பெற்றுத்தரும் கைத்தொழில் துறையாகவும் ஆடைக் கைத்தொழில் மாறியுள்ளது.

    அந்த வகையில் இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்தில் ஆடைக் கைத்தொழில் முதுகெலும்பாக இருந்து வருகின்றது. இலங்கையிலிருந்து தைத்த ஆடைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால், எமது நாட்டு ஆடைத் தயாரிப்புகளுக்கு உலகில் பாரிய வரவேற்பு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

    இலங்கையில் 1977 இல் திறந்த பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், ஆடைக் கைத்தொழில் வளர்ச்சியில் இலங்கை பிரதான நாடாகியது. இலங்கையின் பெரும்பாலான மாவட்டங்களில் ஆடைத் தயாரிப்புகள் மேற்கொள்ளப்படுவதுடன், ஆடைக் கைத்தொழில் நிறுவனங்களும் உருவாகத் தொடங்கின. இலங்கையில் பெரும்பாலான ஆடைக் கைத்தொழில் நிறுவனங்கள், முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களில் அமைந்துள்ளன.

    எமது நாட்டு ஆடைக் கைத்தொழிலில் செல்வாக்கு செலுத்துகின்ற பிரதான காரணிகளாக தொழிலாளர் வசதி, வெளிநாட்டுச் சந்தைவாய்ப்பு, முதலீடு ஆகியன உள்ளன. அத்துடன் எமது நாட்டில் தொழிலாளர்களை இலகுவில் பெற்றுக்கொள்ளக்கூடிய வசதி உள்ளதுடன், இங்கு தயாரிக்கப்படும் ஆடைகளும் தரமானதாக உள்ளதால் வெளிநாட்டுச் சந்தைவாய்ப்பும் உள்ளது. எமது நாட்டு ஆடைக் கைத்தொழிலில் பெரும்பாலும் வெளிநாட்டு முதலீடுகள் உள்ளதுடன், முதலீட்டாளர்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதி, இடவசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

    இலங்கையில் தயாரிக்கப்படுகின்ற ஆடைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் எமது நாட்டு ஆடைத் தயாரிப்புகளுக்கு அதிக கேள்வி உள்ளதுடன், சர்வதேச சந்தையில் அதற்கு அங்கிகாரமும் உள்ளது. இதனால் ஆடைக் கைத்தொழில், எமது நாட்டு ஏற்றுமதி வருமானம் மற்றும் வர்த்தக நிலுவையில் நேரடி நன்மை பயந்து, நாட்டுக்கு அதிகளவான அந்நியச் செலாவணியை பெற்றுத்தந்து, பொருளாதாரக் கட்டமைப்பை மேம்படுத்துகின்றது.அத்துடன் ஆடை ஏற்றுமதிகள் அதிகரித்து, நிலையான வர்த்தக நடவடிக்கைகளை எமது நாடு பேணும் நிலைமையும் உள்ளது.

    ஆடைக் கைத்தொழில் வேலைவாய்ப்பில் அதிகளவாக பெண்களே உள்ளீர்க்கப்பட்டவர்களாக உள்ளதுடன், எமது நாட்டிலும் இந்நிலைமை உள்ளது. ஆடைக் கைத்தொழிலில் பங்கேற்கும் பெண்களுக்கு நிலையான, நெகிழ்ச்சியான வேலைவாய்ப்புகள் கிடைப்பதுடன், அவர்களின் மகப்பேறுக் காலத்திலும் பாரிய நன்மைகள் கிடைக்கின்றன.

    ஆடைக் கைத்தொழிலால் பெண்கள் தமது குடும்பங்களுக்கு பொருளாதார ரீதியான பங்களிப்பை சுதந்திரமாக வழங்குவதுடன், குடும்ப வருமானத்தையும் உயர்த்துகின்றனர். அவர்களின் குடும்ப வருமானம் உயர்வடைவதால் வாழ்க்கைத்தரம் உயர்வடைகின்றது.

    ஆடைக் கைத்தொழிலால் பொருளாதார ரீதியாக வலுவூட்டப்படும் பெண்களுக்கு புதிய தன்னம்பிக்கை பிறப்பதையும் அவதானிக்க முடிகின்றது. ஆடைக் கைத்தொழில் வேலைவாய்ப்பில் பெண்களுக்கு கிடைக்கும் வருமானத்தால், அவர்களின் நுகர்வுத் தேவைகளும் தாமாகவே அதிகரிக்கின்றன. அவர்கள் அதிகளவாக பொருட்களை நுகர்வதால் நாட்டுக்கு அதிகளவான வருமானம் கிடைக்கின்றது. இது எமது நாட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பொருளாதார வளர்ச்சியை உண்டுபண்ணி வருகின்றது. இவற்றின் அடிப்படையில் எமது நாட்டு ஏற்றுமதிகள் அதிகரிப்பதால், வற்வரி வருமானம் பெருமளவாக கிடைத்து, அரசாங்கத்தின் வருமானம் அதிகரிக்கும் சாத்தியக்கூறு உள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

    இவ்வாறு ஆடைக் கைத்தொழிலில் எமது நாடு முன்னேறி வருகையில், கடந்த 2019 டிசெம்பர் இறுதியில் கோவிட்-19 தொற்று பரவிய போது, எமது நாடும் அதனால் பாதிக்கப்பட்டதுடன், எமது நாடு 2022 முற்பகுதியில் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியது. இந்த இரு இக்கட்டான சூழ்நிலைகளிலும் எமது நாட்டு தொழில்துறைகளின் வருமானத்தில் வீழ்ச்சி ஏற்பட்டதுடன், பொருளாதார முன்னேற்றத்தில் சரிவை எமது நாடு எதிர்நோக்க நேரிட்டது. இவ்விரு தாக்கங்களும் எமது ஆடைக் கைத்தொழில் பாதிப்புக்கு விதிவிலக்கல்ல. ஆயினும் எமது நாடு கோவிட்-19 தாக்கம், பொருளாதார நெருக்கடியிலிருந்து தற்போது மீண்டெழுகையில், ஆடைக் கைத்தொழிலாலும் அதன் பொருளாதாரப் பங்களிப்பு மீண்டும் நாட்டுக்கு கிடைக்க தொடங்கியுள்ளது.

    அந்த வகையில் ஆடைக் கைத்தொழில் நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக உலகளாவிய ரீதியில் அமெரிக்கா, லண்டன், ஐரோப்பிய நாடுகளில் விளங்கிவரும் MAS Holdings நிறுவனம், மூன்று சகோதரர்களான Mahesh Amalean, Sharad Amalean, Ajay Amalean ஆகியோரால் 1987 இல் நிறுவப்பட்டதுடன், அதன் தலைமை அலுவலகம் கொழும்பின் பத்தரமுல்லையில் அமைந்துள்ளது. இதன் கிளைகள் இலங்கையின் பல இடங்களிலும் உள்ளன.

    வடமாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை இலக்காகக் கொண்டு அவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி, வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றும் நோக்கில் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் MAS கிறீடா வானவில் எனும் பெயரில் இதன் கிளை நிறுவனம், கிளிநொச்சியின் அறிவியல் நகரில் இயங்கி வருகின்றது. MAS Holdings நிறுவனத்தில் பிரதானமாக உள்ளாடைகள், ஓய்வு மற்றும் விளையாட்டு ஆடைகள், நீச்சல் ஆடைகள், குத்துச்சண்டை வீரர்களுக்கான ஆடைகள், யோகாவில் ஈடுபடுபவர்களுக்கான ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன.

    இந்த நிறுவனத்தின் சிறப்பம்சமாக ஆடைக் கைத்தொழிலில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதுடன், அவர்களுக்கு பயிற்சி, அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான சலுகைகளும் வழங்கப்படுகின்றன. இலங்கையில் அமைந்துள்ள MAS Holdings நிறுவனத்தில் அதிகளவாக பெண்களே பணியாற்றுகின்றனர்.

    MAS Holdings நிறுவனத்தின் கிளிநொச்சி MAS கிறீடா வானவில் கிளையில் பணியாற்றும் தயாபரன் தர்சினி (வயது 36) ஆடைக் கைத்தொழில் தொடர்பான அனுபவத்தையும் MAS கிறீடா வானவில் கிளையில் தான் பணியாற்றுவதால் அடைந்துவரும் நன்மைகளையும் தினகரன் பத்திரிகை வாசகர்களுடன் பகிர்ந்துகொண்ட போது:-

    “கிளிநொச்சியின் அறிவியல் நகரை வசிப்பிடமாகக் கொண்ட எனக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். எனது கணவருக்கு நிரந்தர வருமானம் இல்லாமையால், அவ்வப்போது கிடைத்த அவரது வருமானத்தில் எமது குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்துவந்தோம். ஆயினும் அவரது வருமானம் போதுமானதாக இருக்கவில்லை. கணவரின் அப்போதைய வருமானத்தில் எமக்கான உணவுத் தேவை, பிள்ளைகளின் கற்றல் உள்ளிட்ட செலவீனங்களை சமாளிப்பதே பாரிய சிரமமாக இருந்தது. யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து எமது சொந்த இடத்துக்கு திரும்பிய நாம், மிகவும் ஏழ்மையை எதிர்நோக்கினோம். அப்போது எமக்கிருந்த இக்கட்டான சூழ்நிலையில் எமது குடும்பப் பாரத்தை கணவருடன் இணைந்து தாங்கிப்பிடிக்க நான் எண்ணினேன். வேலை தேடி அலைந்தேன். இதன்போது MAS Holdings நிறுவனத்தின் MAS கிறீடா வானவில் கிளையில் எனக்கு வேலைவாய்ப்புக் கிடைத்தது.

    2012ஆம் ஆண்டு டிசெம்பரில் MAS கிறீடா வானவில் கிளையில் நான் பணியில் இணைந்தவுடன் எனக்கு MAS Holdings நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக அந்நிறுவன மேலதிகாரிகள் தெளிவுபடுத்தியதுடன், நான் நியமனம் செய்யப்பட்ட பணியில் 6 மாதங்களுக்கு சம்பளத்துடன் பயிற்சி வழங்கினர்.

    அவ்வாறு வேலையில் இணைந்த போது எனது பிள்ளைகளை பராமரிப்பதற்கு எவரும் இல்லை. ஆயினும் எனக்கு பிள்ளைகளை தனியாக விட்டுச்செல்ல முடியாத நிலைமை இருந்தது. இதன்போது பிள்ளைகளை பாதுகாத்து பராமரிப்பதற்கு MAS கிறீடா வானவில் கிளை எனக்கு கைகொடுத்து உதவியது. MAS கிறீடா வானவில் கிளையில் பணியாற்றும் பெண் பணியாளர்களின் நன்மை கருதி பிள்ளைகளை பராமரிக்கும் நிலையமொன்று அங்கு இயங்கி வருவதுடன், அதில் நான் எனது பிள்ளைகளை ஒப்படைத்துவிட்டு அலுவலகப் பணியில் கவனம் செலுத்தினேன். இதன்போது MAS கிறீடா வானவில் கிளையின் பிள்ளைகள் பராமரிப்பு நிலையத்தில் உணவு, கற்றல் வசதி உள்ளிட்ட சகல சேவைகளையும் வழங்கி மிகவும் உன்னதமாக எனது பிள்ளைகளை பராமரித்தனர். எனது பணி நேரத்திலும் கூட, எனது பிள்ளைகளை எந்நேரமும் என்னால் கண்காணிக்கக் கூடியதாக இருந்தது.

    MAS கிறீடா வானவில் கிளையில் ஆடைகளுக்கு அந்தந்த இலட்சினை (Logo) பொறிக்கும் பணியில் நான் இணைக்கப்பட்டேன். அதில் நான் ஆரம்பத்தில் பயிற்சி உறுப்பினராக இணைந்தேன். எனது கடின உழைப்பால் பின்னர் Team Leder, Group Leader ஆகிய படிநிலைகளில் நான் பணியில் உயர்வடைந்துள்ளேன்.

    MAS கிறீடா வானவில் கிளையில் நான் வேலை செய்வதால் எனது குடும்பத்துக்கான பொருளாதார தேவைகளை இலகுவில் பூர்த்திசெய்ய முடிவதுடன், எவரிடமும் கடன் கேட்டு நிற்காமல் கௌரவத்துடன் வாழ்கிறேன். எனது பிள்ளைகளையும் கல்வித்துறையில் முன்னேற்றி வருகின்றேன்.

    ஒரு குடும்பப் பெண்ணாகிய நான், எனது குடும்ப முன்னேற்றத்துக்கும் கணவருக்கும் ஒத்தாசையாக இருந்துகொண்டு தலைநிமிர்ந்து வாழ்கிறேன். ஆக மொத்தத்தில் MAS கிறீடா வானவில் கிளையால் நான் எனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக உள்ளேன்.

    என்னை போன்ற பெண்களுக்கு நான் என்ன கூறுவது என்னவென்றால், நீங்கள் கல்வித்துறையில் முன்னேறும் அதேவேளை, தையல் கலையையும் பழக வேண்டுமென்று கூறுகின்றேன். நேரத்தை வீணே கழிக்காமல் பகுதியளவில் தையல் தொழிலாலும் வருமானம் ஈட்ட முடியும். தையல் தெரிந்த பெண்களுக்கு MAS கிறீடா வானவில் கிளை எப்போதும் கைகொடுத்து உதவுவதுடன், தையல் தெரியாத பெண்களுக்கு MAS கிறீடா வானவில் கிளை பயிற்சி வழங்கி வேலைவாய்ப்பை வழங்கத் தயாராக உள்ளது” என்றார். ஆம். ஆடைக் கைத்தொழிலால் உலகளாவிய வர்த்தக உறவை கட்டியெழுப்பி வெளிநாடுகளுடன் வலுவான உறவை பேணுவதற்கு, ஒவ்வொரு பெண்களும் முன்வர வேண்டும். தம்மால் முடிந்தவரை நாட்டுக்கு பொருளாதாரப் பங்களிப்பை வழங்கி நன்மை பயப்பதற்கு எமது நாட்டு ஆண், பெண் இருபாலாருக்கும் MAS Holdings நிறுவனம் வேலைவாய்ப்புடன் பாரிய நன்மைகளை வழங்குன்றமை வரவேற்கப்படுவதுடன், தொழில் வழிகாட்டியாகவும் MAS Holdings நிறுவனம் அமைந்துள்ளமை மிகவும் சிறப்பம்சமாகும்.

    Categories
    • Active (3)
    • Events (1)
    • Fabrics (1)
    • Featured (6)
    • Intimates (7)
    • Kreeda (7)
    • Linea Aqua (2)
    • Top News (27)
    • Uncategorized (5)
    • Video (4)
    Facebook Instagram YouTube

    MAS Holdings, the largest apparel tech company in South Asia, is a leading concept-to-delivery solution provider in apparel and textile manufacturing, sought after by the world's leading brands.

    Cookie Policy

    Copyrights © 2023 Diyani Online Magazine.

    Site by LK Designers.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    අ
    அ