சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் முகமாக பெண்களும் பால்நிலை சமத்துவமும் எனும் தலைப்பில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சித் திட்டங்கள் MAS Active Mamadala நிறுவன வளாகத்தில் இடம்பெற்றது. 33 முதல் 43 வயது வரையான அங்கத்தவர்களுக்கான பிணியாய்வு நிலையம் கர்ப்பிணித் தாய்மாரை விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித் திட்டம் சிறுவர் மற்றும் மகளிர் பணியக ஊழியர்களின் பங்களிப்புடன் மகளிர் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம் ஓவிய மற்றும் கைப்பணி கண்காட்சி எனும் நிகழ்ச்சித் திட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டன. இங்கு சூழல் நேய மூலப் பொருட்களை மாத்திரம் பயன்படுத்தி அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கவொன்றாகும்.