எனது அன்புக்குரிய MAS அங்கத்தவர்களுக்கு ,
திட்வா சூறாவளியின் காரணமாக, கடந்த சில நாட்களாக எதிர்கொள்ள நேர்ந்த இடர் நிலைமையில் பல பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள நேர்ந்தது. இங்கு பெரும்பாலான மக்கள் இடம்பெயர்ந்தார்கள். பலர் உயிரிழந்தார்கள். இந்த அனர்த்தம் பெரும் வேதனையைத் தந்தது. இந்தத் தருணத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட சகலருக்காகவும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் MAS அங்கத்தவர்கள் பலரும் உள்ளனர். அத்தகையோர் பற்றிய விபரங்களை அறிந்து, எம்மால் முடிந்ததை செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். பேரனர்த்தத்தில் MAS அங்கத்தவர்கள் மூன்று பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்ற செய்தி, மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்துகிறது. அவர்களின் குடும்பத்தவர்களுக்கு உளமார்ந்த அனுதாபங்களைக் கூறிக் கொள்கிறோம். அத்துடன், 400 இற்கு மேற்பட்ட MAS அங்கத்தவர்களை பாதுகாப்பான ஸ்தானங்களை நோக்கி அனுப்ப வேண்டிய நிலைமையும் ஏற்பட்டுள்ளது. அந்த அங்கத்தவர்களுக்கு சொந்தமான 800 இற்கு மேற்பட்ட வீடுகளும் சேதமடைந்துள்ளன. இது உண்மையிலேயே மிகவும் வருந்தத்தக்க தருணமாக அமைந்திருப்பதுடன், இதில் சிக்கியவர்களை மீண்டெழச் செய்ய எம்மாலான சகலதையும் செய்வதற்கு நாம் முன்னிற்போம் என்பதை உறுதிபடக் கூறுகிறோம். நாம் அர்ப்பணிப்புடன் பாடுபடுவோம். உங்களது எந்தவொரு பிரச்சனை பற்றியும் எங்களுடன் பேசலாம். அதற்காக, ஆளணி வளப் பிரிவுடன் பேசவும் வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறோம்.
வெள்ளப்பெருக்கு, மண்சரிவு காரணமாக, எமது ஆலைகள் சிலவற்றை மூட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதுடன், எமது உற்பத்தி நடவடிக்கைகளுக்கும் பெரும் முட்டுக்கட்டைகள் உருவாகியிருந்தன. இருந்தபோதிலும், இந்தத் தருணத்தில், எமது தேசத்தின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும், எமது நிறுவனத்தின் நலனுக்காகவும் நீங்கள் பாடுபட்ட விதத்தை நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம். பல நாட்களுக்குப் பின்னர் வேலைக்குத் திரும்பி, தொழிற்சாலைகளை திறக்கச் செய்து, அவற்றைத் தொடர்ந்து இயங்கச் செய்ய நீங்கள் வழங்கிய மிகச்சிறந்த பங்களிப்பை நாம் பெரும் கௌரவத்துடன் நினைவுகூர்கிறோம்.
இது மிகவும் கஷ்டமான தருணமாக இருந்தபோதிலும், நாம் மனோதிடத்துடன் இருக்க வேண்டும். துவண்டு விடாமல் இருக்கத் தேவையான உள உறுதி உங்களிடம் உள்ளதென உறுதியாக நம்புகிறேன். இயன்ற சகல சந்தர்ப்பங்களிலும் உங்களுக்கு அருகில் நின்ற உரமூட்டத் தயாராக இருக்கிறோம். நாம் எப்போதும் உங்களுடன் இருப்போம். நாம் ஒரே குழுவினராய் சவால்களை எதிர்கொள்வோம். நாம் தைரியமாக முன்னேறுவோம்.
சுரேன் பெர்ணான்டோ
பிரதம நிறைவேற்று அதிகாரி – MAS Holdings
Subscribe
Login
0 Comments
Oldest
