UNFPA இலங்கை பிரிவின் உதவியுடன், ஆடைத் துறையில் பெண்களுக்காக கட்டப்பட்ட முதல் நல்வாழ்வு மையம், சமீபத்தில் கிளிநொச்சியில் UNFPA இலங்கை பிரிவு புதிய செயல் அதிகாரி திரு. ஃபுன்ட்ஷோ வங்கியேல் (Phuntsho Wangyel) அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
UNFPA இலங்கை பிரிவு, MAS குழுமம், ஜப்பான் அரசு மற்றும் இலங்கை செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றின் கூட்டுத் தலைமையில் நடைபெறும் இந்தத் திட்டம், நாட்டின் முக்கியத் தொழிலான ஆடைத் துறையை வலுப்படுத்தும் பணியாளர்களுக்கு கௌரவம், சுகாதாரம் மற்றும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆடைத் துறையில் பணிபுரியும் 350,000 க்கும் மேற்பட்ட பணியாளர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர். எனவே இந்த நல்வாழ்வு மையம் அவர்களின் மனநலம், இனப்பெருக்க ஆரோக்கியம், துன்புறுத்தல் மற்றும் வன்முறை போன்ற பிரச்சினைகளுக்கு உள்ளானோர் தொடர்பாக அதிக கவனம் செலுத்துகிறது.
பணியாளர்களின் நலனுக்காக தனியார் துறை மேற்கொள்ளும் இத்தகைய முதலீடுகள், உண்மையில் ஒரு நியாயமான எதிர்காலத்திற்கான முதலீடாகும். அதுமட்டுமன்றி, இது ஒவ்வொரு துறையையும் பற்றி அதிக பொறுப்புடன் சிந்திக்கின்றது என்பதற்கான சான்றாகவும் அமைகின்றது.