விளையாட்டுப் போட்டிகளில் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தக்கூடிய வகையிலான ஆடைகளை உற்பத்தி செய்வதில் உலக அளவில் முன்னணியில் திகழும் MAS Holdings இன் Bodyline நிறுவனம், 2024ஆம் ஆண்டு பாரிசில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக இலங்கையின் தேசிய மெய்வாண்மைப் போட்டியாளர் குழாமிற்கு அதிநவீன விளையாட்டு ஆடைகளை பெற்றுக் கொடுத்து அனுசரணை வழங்க இலங்கை மெய்வாண்மை சங்கத்துடன் (SLAA) கைகோர்த்துள்ளது. இலங்கையின் தேசிய குழாம் பங்கேற்கும் சகல சுற்றுத்தொடர்களுக்காகவும் Bodyline மூலம் தரத்தில் சிறந்த விசேட விளையாட்டுத்துறை ஆடைகள் பெற்றுக் கொடுக்கப்படும்.
Bodyline மூலம் தயாரிக்கப்பட்ட விளையாட்டுத்துறை ஆடைகள், பல தசாப்த காலமாக MAS குழுமம் பெற்ற தேர்ச்சியின் உச்ச பலாபலனாகத் திகழும் தயாரிப்புக்களாக, நவீன தொழில்நுட்பங்களும் சேர்க்கப்பட்டவை. இந்த ஆடைகள் ஒட்டுமொத்த இலங்கையையும் பிரதிபலிக்கும் வகையில் நீலமும், பொன் வண்ணமும் சேர்த்து கவர்ச்சிகரமாக வடிவமைக்கப்பட்டவை. அத்துடன், வலுவையும், ஈடுகொடுக்கக் கூடிய தன்மையையும், புதுமையையும் குறிக்கும் வகையில், யானையும் சிங்கமும் ஒன்று சேர்ந்த ‘கஜசிங்க’ உருவமும் ஆடைகளில் பொறிக்கப்பட்டுள்ளன. ஐந்தாவது ஆசிய மெய்வாண்மை சுற்றுத்தொடரில் பங்கேற்ற இலங்கை கனிஷ்ட மெய்வாண்மைப் போட்டியாளர்கள் வெற்றியின் பெருமையுடன் கஜசிங்க உருவத்துடன் கூடிய படைப்பை காட்சிப்படுத்தினார்கள்.
இந்த அனுசரணையின் மூலம், இளம் போட்டியாளர்களை வலுவூட்டுவதில் Bodyline இற்குள்ள அர்ப்பணிப்பு வலியுறுத்தப்பட்டது. சமீபத்தில் ஆசிய சம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்ற தேசிய மெய்வாண்மை போட்டியாளர் குழாம், சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்தி வெற்றிப் பதக்கங்களைக் கொண்டு வந்தது. தேசிய மட்ட சாதனைகளை நிலைநாட்டியது. இத்தகைய தொடர் வெற்றிகளுக்காக விளையாட்டு வீரர்களையும், வீராங்கனைகளையும் ஊக்குவிப்பது Bodyline இன் நோக்கமாகும்.
Bodyline – SLAA நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பின் மூலம் தேசிய மெய்வாண்மை விளையாட்டுத்துறையில் கணிசமான வளர்ச்சி சாத்தியமாகியுள்ளது. எதிர்காலத்தில் ஒத்துழைப்பை மென்மேலும் வலுப்படுத்த Bodyline நிறுவனம் தயாராக இருக்கிறது. ‘ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை மெய்வாண்மைக் குழாமிற்கு சீருடைகளை வழங்கும் அனுசரணையாளராக செயற்பட முடிந்தமை பற்றி நாம் பெருமை அடைகிறோம். இந்தத் திறமையான போட்டியாளர்களுக்கு உதவி செய்து, அவர்கள் வெற்றிகளைக் குவிப்பதைக் காண்கையில் மகிழ்ச்சி கொள்கிறோம். இந்த வெற்றிகள் உலகெங்கிலும் விளையாட்டுத்துறை ஆடை வகைகளை நவீனமயப்படுத்தலில் எமக்குள்ள திடசங்கற்பத்தை மீளவும் உறுதிப்படுத்துகின்றன’, என்று டீழனலடiநெ இன் சந்தைப்படுத்தல் மற்றும் வணிக அபிவிருத்தி நடவடிக்கை பணிப்பாளர் டில்ஷான் மொஹம்மட் தெரிவித்தார்.
இந்த அனுசரணைக்கு அப்பால், Bodyline இன் Runner to Runner பங்களிப்பின் ஊடாக சகல விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கும், தொழில்முறை சார்ந்தவர்களுக்கும் சிறப்பான ஓட்ட அனுபவத்தைப் பெற்றுக் கொடுப்பதற்காக ஒப்பற்ற விளையாட்டு ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன. தேசிய மட்ட வீர, வீராங்களின் பங்கேற்புடன், Bodyline இல் உள்ள அதிநவீன உயிரியல் பொறிமுறை ஆய்வு கூடத்தில் உடல் அசைவு மற்றும் வலி தரும் ஸ்தானங்களை கண்காணிக்க தரவுகள் சேகரிக்கப்படுகின்றன. மேம்படுத்தப்பட்ட உற்பத்தி முறைகளை பரீட்சித்துப் பார்ப்பதன் மூலம் ஓட்டப் போட்டியாளர்கள், பொதுமக்கள் ஆகிய இரு சாராருக்கும் தேவையான வகையில் பரந்துபட்ட தயாரிப்புக்களை உருவாக்குவது Bodyline இன் நோக்கமாகும். ஆய்வுகூட பின்னூட்டங்கள் தீவிரமான கண்காணிப்பிற்கு உள்ளாக்கப்படுவதுடன், அவற்றின் பலனாக தொடர்ச்சியான முறையில் உற்பத்திகள் மேம்படுத்தப்பட்டு, புதிய கோட்பாடுகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. Bodyline உற்பத்திகள் நுகர்வோரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து, சந்தையில் புதிய வாய்ப்புக்களை உருவாக்கும் வகையில் உற்பத்திகளை மேம்படுத்துவதால், அவை வாடிக்கையாளர்களின் முழுமையான நம்பிக்கையை வென்றுள்ளன.
உயர்மட்டத்திலான விளையாட்டு ஆடைகளை உற்பத்தி செய்வதில் உலக அளவில் முன்னணியில் திகழும் அமைப்பாக, வீர-வீராங்கனைகளின் அனுபவங்களை சிறப்பாக்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய புத்தாக்கங்களை தயாரிக்க திடசங்கற்பம் பூண்டுள்ளது.
Bodyline என்பது அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்தின் மூலம் விளையாட்டு வீர வீராங்கனைகளின் அனுபவங்களை மேம்படுத்த திடசங்கற்பம் பூண்டு, அதிக செயலாற்றுகை மிக்க விளையாட்டு ஆடைகளை உற்பத்தி செய்வதில் உலகளவில் முன்னணி அமைப்பாகும்.